ஊர்க்காவல் படைக்கு அதிகம் விண்ணப்பிக்கும் முதுகலை பட்டதாரிகள்...

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (18:42 IST)
தமிழகத்தில் ஊர்காவல் படை திறம்பட செயல்பட்டு வருகிறது. இதற்காக பல படித்த இளைஞர்கள் பலரும் போட்டி போட்டுகொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். இதில் குறிப்பாக தம் சொந்த ஊரிலேயே  வேலை பார்க்க முடியும் என்பதால் இளைஞர்கள் மத்தியில் இதற்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. முக்கியமாக அரசு சம்பளமும் இதற்கு முக்கிய காரணம்.
வேலூர் மாவட்டத்தில் தற்போது ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பொருட்டு இதற்கு ஆர்வம் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. 
 
மேலும் இந்த ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதுகலை பட்டதாரிகளாக உள்ளதாக தகவல் வெளியாகின்றன.
 
கடந்த 2017 - 18 ஆம் ஆண்டுகளில் வேலை வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்தவர்களில் 6.1% பேர் ஊர்காவ்கல் படையில் சேர்ந்ததாகவும் தகவல் வெளியானது.
 
இந்நிலையில் தற்போது 2019 ஆம் ஆண்டிற்கான ஊர்க்காவல் படைக்கு மொத்தம் 56 பணியிடங்களுக்கு இதுவரை 6400 இளைஞர்கள் விண்ணப்பங்கள் அனுப்பி உள்ளனர். இதில் குறிப்பாக அதிக அளவில் முதுகலை பட்டதாரி இளைஞர்கள்  விண்ணப்பித்துள்ளனர்.
 
இந்த ஊர்க்காவல் படைக்கு மாதச் சம்பளம் 2800 ரூபாய்.மாதச் சம்பளத்திற்கு வருபவர்களுக்கு வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை. தினக்கூலியாக வந்து வேலை செய்பவர்களுக்கு நாளோன்றுக்கு 560 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் . இவர்கள் எப்போது கூப்பிட்டாலும் குறிப்பிட்ட இடதிற்கு சென்று பணியில் ஈடுபட வேண்டும் என தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்