வங்கிகளுக்கு விடுமுறை அளித்து வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு!
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.