இந்தி தெரியாது போடா…. டி ஷர்ட் வரிசையில் அடுத்த பொருள்!

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (16:25 IST)
இந்தி தெரியாது போடா என்ற டி ஷர்ட்கள் பிரபலமாகி வரும் நிலையில் இப்போது காபி கப்களும் வரத் தொடங்கியுள்ளன.

இந்தி திணிப்புக்காக தமிழகமே ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்பட ஒருசில திரை நட்சத்திரங்கள் திடீரென இந்தி தெரியாது போடா மற்றும் ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ போன்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்களை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இந்த ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரண்ட் ஆனதால் இப்போது இந்த டிஷர்ட்க்கான ஆர்டர்கள் குவிந்து வருவதாக சொல்லப்படுகிறது.

டிஷர்ட் வியாபாரம் அதிகமானதைத் தொடர்ந்து இப்போது அதே வாசகம் தாங்கிய காபி கப்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டிஷர்ட்களை போலவே இந்த காபி கப்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்