சி.வி.சண்முகம் மீதான 2 அவதூறு வழக்குகள் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

Siva
புதன், 24 ஜனவரி 2024 (11:18 IST)
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான 2 அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் சி.வி.சண்முகம் மீதான மேலும் 2 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தொழிலாளர் சட்டம் குறித்தும், 420 அரசு என பேசியதற்காக சிவி சண்முகம்  வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கொரோனா தொற்று பரவல் காரணமாக, பொதுக்கூட்டங்களில் பேசியபோது, அரசு ஊழல், மோசமான நிர்வாகம் போன்றவற்றை சுட்டிக்காட்டியதன் காரணமாக, அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் தொடரப்பட்டவை. எனவே, இந்த வழக்குகள் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கோரியிருந்தார்.
 
சிவி சண்முகம் மீதான அவதூறு விசாரித்த நீதிபதிகள்  கொரோனா தொற்று பரவல் காரணமாக, பொதுக்கூட்டங்களில் பேசும் போது, அரசு ஊழல், மோசமான நிர்வாகம் போன்றவற்றை சுட்டிக்காட்டுவது, அவதூறு என்று கருத முடியாது. எனவே, இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என்று உத்தரவிட்டனர்.
 
ஆனால் கடந்த தொழிலாளர் சட்டம் குறித்தும், 420 அரசு என பேசியதற்காக, சி.வி.சண்முகம் மீது மேலும் 2 அவதூறு  வழக்குகள் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கோரிக்கை மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். தொழிலாளர் சட்டம் குறித்தும், 420 அரசு என பேசியதுஅரசு அதிகாரிகளின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் இருந்தால், அது அவதூறு ஆகும். எனவே, இந்த வழக்குகள் தொடர்பான விசாரணையை தொடரலாம்" என்று உத்தரவிட்டனர்.
 
இந்த உத்தரவால், சி.வி.சண்முகம் மீதான 2 அவதூறு வழக்குகள் தொடர்பான விசாரணை தொடரும் என்று தெரிகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்