கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சுற்றுலா; அமைச்சர் அறிவிப்பு

Webdunia
சனி, 13 மே 2017 (20:48 IST)
விரைவில் தமிழகத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க உள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.


 


 
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்ச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியதாவது:-
 
தேசிய அளவில் அதிக சுற்றுலாப்பயணிகள் வரும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை வகிக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த உள்ளன. மதுரையை மையமாக்கி ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். 
 
இதற்கான ஆய்வு பணிகள் நடைப்பெற்று வருகிறது. விரைவில் தமிழகத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படும், என்றார்.
 
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் ஆந்திரா மாநிலத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
மதுரையை மையமாக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கட்டாயம் கொடைக்கானல் பகுதியில் இத்திட்டம் செயல்படும். இனி கொடைக்கானலை ஹெலிகாப்டர் மூலம் சுற்றிப் பார்கலாம். 
அடுத்த கட்டுரையில்