சென்னையில் கடும் பனிமூட்டமாக உள்ளதால் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மார்கழி மாதம் முடிந்து தை பிறந்த பின்னரும் கூட பனியின் தாக்கம் குறையவில்லை. மார்கழிக்கு பிறகுதான் அதிகமான பனி மூட்டம் காணப்படுகிறது. கடற்கரையோர மாவட்டங்களில் காலை 8-9 மணி வரையிலுமே பனிமூட்டம் தொடர்வதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று வழக்கத்தை விட பனிமூட்டம் அதிகமாக நிலவுகிறது. இதனால் அன்றாட வேலைகளுக்கே செல்லும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் அடர்பனி காரணமாக விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
திருவனந்தபுரம், பெங்களூரிலிருந்து வந்த உள்நாட்டு விமானங்கள் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திருப்பி விடப்பட்டுள்ளன. துபாயில் இருந்து வந்த பயணிகள் விமானம் அடர்பனி காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K