மாலை 4 மணிக்கு மெல் 16 மாவட்டங்களில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (14:35 IST)
இன்று மாலை 4 மணிக்கு மேல் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மேல் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது. 
 
காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை  பகுதிகளில் கனமழை இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்