வரப்போகுது செம மழை; குடை தயாரா? – எந்தெந்த மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு?

வெள்ளி, 27 அக்டோபர் 2023 (09:53 IST)
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக 29 மற்றும் 30ம் தேதிகளில் கனமழை பெய்ய உள்ளது.



தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை அவ்வபோது பெய்து வருகிறது. சமீபத்தில் வங்க கடலில் ஏற்பட்ட புயலை அடுத்து வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 29ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், விருதுநகர், தூத்துக்குடி, தேனி, மதுரை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், கோவை மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 30ம் தேதியன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், விருதுநகர், தூத்துக்குடி, தேனி, மதுரை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். கோவை சுற்று வட்டார பகுதிகள், புதுச்சேரியில் பரவலாக சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்