இன்று மாலை 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (16:39 IST)
இன்று மாலை தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாகவும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்கிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் இன்று மாலை தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் இந்த மாவட்டத்தில் உள்ள நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்