அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

திங்கள், 27 நவம்பர் 2023 (11:01 IST)
வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன் தெரிவித்துள்ளது

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும் இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என்றும் கூறப்பட்டுள்ளது

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்கக்கடல்  பகுதியில் நவம்பர் 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் அதன் பின்னர் இந்த அது புயலாக மாறுமா என்பதை கண்காணித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்