நடிகராகவும், தலைவராகவும் மக்கள் இதயங்களை வென்றவர்! – எம்.ஜி.ஆர் குறித்து பிரதமர் மோடி புகழாரம்!

Prasanth Karthick
புதன், 17 ஜனவரி 2024 (09:07 IST)
இன்று அதிமுக ஸ்தாபகரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



தமிழ் சினிமா நடிகரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்படுகிறது. இதற்காக பல பகுதிகளிலும் எம்.ஜி.ஆர் சிலைகள் தூய்மை செய்யப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அவரை நினைவுக்கூர்ந்து பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி “எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை இன்று நினைவு கூர்ந்து கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு தலைவராகவும் இருந்தார். அவரது படங்கள், குறிப்பாக சமூக நீதி மற்றும் பச்சாதாபம், வெள்ளித்திரைக்கு அப்பால் இதயங்களை வென்றன. தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்