ராமர் கோவில் திறப்பு விழா: 2,600 இடங்களில் ராமாயண பாராயண நிகழ்ச்சி நடத்தும் டெல்லி முதல்வர்..!

Siva
புதன், 17 ஜனவரி 2024 (07:59 IST)
ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள்  தனது  கட்சியினர்  ராமாயண பாராயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்  
 
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து டெல்லீயில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ராமாயணத்தில் வரும் சுந்தரகாண்ட பாடல்கள் பாராயணம் செய்யப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

ALSO READ: ராமர் கோயில் திறப்பு நாளன்று என்ன செய்ய போகிறார் மம்தா பானர்ஜி: அதிரடி அறிவிப்பு!
 
மொத்தம் 2600 இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும்  டெல்லி முதல்வர் சில குறிப்பிட்ட இடங்களில் பாராயண நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
 
மேலும் முதல்வர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் இராமாயண பாராயண நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம்  இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள்  ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணித்திருக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி ராமர் கோயிலுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்