இரண்டு வெவ்வேறு வழக்குகளில் ஹெச். ராஜா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, ஹெச். ராஜா பெரியார் சிலையை உடைப்பேன் என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததுடன், திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறாகவும் பதிவு செய்தார். இதுகுறித்து இரண்டு வழக்குகள், எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தன.
இந்த வழக்கை ரத்து செய்ய எச். ராஜா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை முடிந்து, சற்று முன் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பில், ஹெச். ராஜா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதுடன், அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran