பெண்கள் கல்லூரியில் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம்

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (18:00 IST)
மதுரையில் பெண்கள் கல்லூரியில் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
மதுரையில் கடந்த மாதம் 30ஆம் தேதி பெண்கள் கல்லூரியில் நுழைந்த சூர்யா, அருண், அருண் பாண்டியன், மதுநவீஸ்  ஆகிய 4 பேர் உள்பட 10 பேர் ரகளையில் ஈடுபட்டனர். இதை தட்டிக்கேட்ட மாணவிகளின் பெற்றோர்களும் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது 
 
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் 10 பேர் கைதான நிலையில் அவர்களில் சூர்யா, அருண், அருண் பாண்டியன், மதுநவீஸ் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இதனையடுத்து இந்த நான்கு பேர்களும் சில மாதங்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்