திருமணமான 6 மாதத்தில் பெண் தற்கொலை...

சனி, 19 நவம்பர் 2022 (17:12 IST)
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில்  திருமணமான சில மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்ப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மானாமதுரை பர்மா காலனி என்ற பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீஸ். இவர் கடந்த மே மாதம் ஜெபசீலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும்  3 ஆண்டுகளாகக் காதலித்து வந்த ந்லையில், குடும்பத்தினர் சம்மதத்தின் பேரின் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், தனியார் நிதி நிறுவனத்தின் வேலை செய்து வரும் ஜெகதீஸ், வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜெகதீஸின் அம்மா, தங்கை ஆகிய இருவரும் ஜெபசீலிக்கு தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து, கணவரிடம் பேச செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் கட்ச் செய்துள்ளார். இதனால் வேதனை அடைந்த ஜெபசீலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜெபசீலி சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த வருகின்றனர்.
 
Edited By Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்