மே ஒன்றாம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 26, ஆகஸ்ட் 15, மே 1 உள்பட ஒரு சில நாட்களில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்பதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் மட்டும் இந்த கூட்டம் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வரும் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினத்தில் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் கிராம சபை கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பெற்றுள்ளது.
மேலும் கூட்டம் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது