வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு! – ஆளுனர் உடனடி ஒப்புதல்!

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (09:32 IST)
தமிழக சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு ஆளுனர் ஒப்புதல் அளித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தில் வன்னியர் சமுதாயத்திற்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் சீர்மரபினருக்கு 7% ஒதுக்கீடு வழங்கவும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டில் குறிப்பிட்ட அளவு உள் ஒதுக்கீடு வழங்க புதிய பிரிவு ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் நேற்று முன் தினம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இரண்டே நாளில் இந்த மசோதாவிற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்