2 நாட்களில் 2.5 லட்சம் மாணவர் சேர்க்கை! – மாஸ் காட்டும் அரசு பள்ளிகள்!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (10:57 IST)
தமிழகத்தில் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கி இரண்டே நாட்களில் அரசு பள்ளிகளில் மட்டும் 2.50 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்ட நிலையில் புதிய மாணவர்கள் சேர்க்கை நேற்று முன் தினம் முதலாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

2020-2021ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தமாக 2.50 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தொடரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவர்கள் வராவிட்டாலும் பெற்றோர்கள் உரிய ஆவணங்களை காட்டி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்டு 24 முதலாக ப்ளஸ் 1 வகுப்புகளுக்கான அட்மிசன் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்