சர்வதேச டெண்டர் மூலம் தடுப்பூசி இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு!

Webdunia
புதன், 12 மே 2021 (17:44 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிக்கு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சர்வதேச டெண்டர் மூலம் தடுப்பூசியை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது 
 
18 முதல் 45 வயது உள்ள அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு போதிய அளவில் தடுப்பூசிகள் இல்லாததால் உலக அளவில் ஒப்பந்த புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது 
 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்திற்கு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ஒதுக்கீடு 18 வயதிலிருந்து 45 வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதிய அளவில் இல்லை என்பதால் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்