கொரோனா நிவாரணத் தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியிட்டுள்ளார் மு.க.,ஸ்டாலின்.
திமுக கூட்டணி நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்றது. இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள் 34 பேர் தமிழக அமைச்சரவையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இன்று பதவியேற்றவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,
1)கொரொனாவுக்கு இலவச சிகிச்சை,
2)மே மாதம் 16 ஆம் தேதி முதல் ஆவின் பால் விலை குறைப்பு,
5)100 நாட்களில் தீர்வு திட்டத்திற்உ புதியதுறை என்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரணமாக மே மாதத்தில் ரூ.2000 வழங்குவதற்காக அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளார்.
இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் முதல்வர் ஸ்டாலின் சொன்னதைத்தான் செய்வார். செய்வதைத்தான் செய்வார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.