போதையில் நடுரோட்டில் இளம்பெண்கள் கும்மாளம் - சென்னையில் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (10:26 IST)
வாலிபர்களுடன் சேர்ந்து போதையில் இளம்பெண்கள் கும்மாளம் போட்ட விவகாரம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை போன்ற பெரிய நகரங்களில் கேளிக்கை விவகாரங்களில் ஆண்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டும் விதமாக இளம்பெண்கள் நடந்து வருகின்றனர். அதிலும், ஐ.டி.துறையில் பணிபுரியும் பெண்கள் வார விடுமுறை நாட்களில் தங்களின் ஆண் நண்பர்களுடன் நட்சத்திர விடுதிகளுக்கு சென்று மது அருந்துவது, குத்தாட்டம் ஆடுவது என்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
 
இந்நிலையில், வேப்பேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வனிதா பேகம், நேற்று முன்தினம் இரவு சூளை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதிகலை 2 மணிக்கு மது அருந்திய இளம்பெண்கள் ஆறு பேர், தங்களின் ஆண் நண்பர்களுடன் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தனர். 
 
போலீஸ் வாகனத்தை பார்த்ததும் வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இளம்பெண்கள் ஆறு பேரையும் பிடித்து கெல்லீசில் உள்ள காப்பகத்தில் வனிதா பேகம் ஒப்படைத்தார். அதன் பின் அவர்கள் எச்சரிக்கப்பட்டு அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்