காயத்ரி ரகுராம் ராஜினாமா ஏற்கப்பட்டதா? தமிழக பாஜக தகவல்!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (21:00 IST)
நடிகை காயத்ரி ரகுராம் கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் அவருடைய ராஜினாமா ஏற்கப்பட்டதாக தமிழ்நாடு பாஜக அதிகார பூர்வமாக அறிவித்தது.
 
 தமிழ்நாடு பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் திடீரென கட்சி கட்டுப்பாட்டுகளை மீறி தனது சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு செய்ததால் ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 
 
இதனை அடுத்து அவர் தான் பாஜகவில் இருந்து விலகுவதாக தெரிவித்ததை அடுத்து அண்ணாமலை மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார் என்பதும் அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் காயத்ரி ரகுராம் ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும் அவர் அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் தமிழக பாஜக தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்