ஊட்டி செல்பவர்கள் கவனத்திற்கு: நாளை முதல் நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்..!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (16:23 IST)
நாளை முதல் நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதால் ஊட்டி செல்பவர்கள் அந்த மாற்றத்தை தெரிந்து கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
 
கோடை சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து கொடைக்கானல் ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளையும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து நாளை முதல் நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இதன்படி உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேட்டுபாளையத்திலிருந்து உதகைக்கு வரும் வாகனங்கள் பர்லியார், குன்னூர் சாலையில்  மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் பகல் நேரங்களில் உதகையில் கனரக வாகனங்களுக்கும் தடை எனவும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்