மகளிர் உரிமைத் திட்டம்: நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்..!

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2023 (07:16 IST)
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் கடந்த 15ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என்பதும் இந்த பணம் அவர்களுடைய வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இருப்பினும் ஒரு சில பெண்களுக்கு இந்த பணம் வரவில்லை என்று கூறப்பட்டது. பலருக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் கலைஞர் உரிமை திட்டத்தில்  விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள அனைத்து இ சேவை மையங்களிலும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்கள் தங்கள் வங்கி கணக்கு எண் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச் சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று முதல் விண்ணப்பிக்கும் மகளிர்கள் கலைஞர் உரிமை திட்டத்தில் பயன் பெரும் தகுதியை பெற்று இருந்தால் அவர்களுக்கும் ரூபாய் ஆயிரம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்