ரூ.1000 கிடைத்தும் கைக்கு வரவில்லை.. மினிமம் பேலன்ஸ் என பிடித்து கொண்ட வங்கிகள்.. அதிருப்தியில் பெண்கள்..!

ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (08:49 IST)
கலைஞர் உரிமைத்தொகை திட்டம்  செப்டம்பர் 15 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தகுதி வாய்ந்த பெண்களின் அனைத்து அனைவருக்கும் ரூபாய் 1000 வங்கிகளில் தமிழக அரசின் டெபாசிட் செய்து உள்ளது. 
 
இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் மினிமம் பேலன்ஸ் இருப்பு வைக்காத பெண்களுக்கு வங்கி  அபராதம் விதித்த காரணத்தினால் தங்கள் கணக்குகளில் ஆயிரம் ரூபாய் வந்தும், அந்த பணத்தை எடுக்க முடியாத நிலை இருப்பதாக பல பெண்கள் அதிருப்தியுடன் தெரிவித்து இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.  
 
மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதற்காக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தொகை பணத்தை எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருவதாக கூறப்படுகிறது.  பலருக்கு வங்கியில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வந்தும் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாத காரணத்தினால் அபராதம் வைத்த வங்கிகள் அந்த அபராத தொகையை எடுத்துக் கொண்டதால்  வங்கியில் எடுக்க முடியாத நிலை உள்ளது.  
 
எனவே இது குறித்து தமிழக அரசு வங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மினிமம் பேலன்ஸ் இல்லாதவர்களுக்கும் கலைஞர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை பயனாளிகளுக்கு சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்