பிரதமர் மோடி வருகை முதல் கனமழை எச்சரிக்கை வரை..! இன்றைய முக்கிய செய்திகள் (30.05.2024)

Prasanth Karthick
வியாழன், 30 மே 2024 (12:42 IST)
இன்று நடைபெற்ற முக்கியமான சம்பவங்களின் சுருக்கமான செய்தி தொகுப்பு


 
3 நாட்கள் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று கன்னியாக்குமரி வருகிறார். குமரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு.

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் ஜாமீன் பெற முடியாத வழக்கில் கைது. அவரது டிரைவிங் லைசென்ஸ் முடக்கப்பட்டுள்ள நிலையில் செல்போன் பேசியபடியே வாகனம் ஓட்டி சென்றதால் கைது

தமிழ்நாட்டில் ஜூன் 1 முதல் ஜூன் 3ம் தேதி வரை கனமழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்

கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு பருவமழை சராசரியை விட அதிகமாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

3 நாட்கள் விலை உயர்வுக்கு பின் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.53,840க்கு விற்பனையாகி வருகிறது

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள காலபைரவர் கோவிலில் வழிபாடு செய்ய வருகை தருகிறார்.

அமெரிக்காவில் ஜூன் 9ம் தேதி நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் உலக கோப்பை டி20 போட்டிக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மிரட்டல். போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.

நார்வேயில் நடந்து வரும் செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார் தமிழக இளம் செஸ் க்ராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தா

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்