தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டுக்கான 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை இன்று தொடங்கப்படுகிறது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி பெறும் பள்ளிகளில் இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது
இதை அடுத்து பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளின் பெயர்களை இன்று முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 2022 -23 ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் முடிவடைந்து தேர்வுகளும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை தற்போது விடப்பட்டுள்ள நிலையில் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.