காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 4 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி. சேலத்தில் சோகச்சம்பவம்..!
வியாழன், 13 ஏப்ரல் 2023 (16:07 IST)
சேலம் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற நான்கு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள காவிரி ஆற்றில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் சிலர் குளிக்க சென்றனர். அப்போது அவர்களில் நான்கு பேர் நேரில் மூழ்கியுள்ளனர்.
பாண்டியராஜன், மணிகண்டன், மற்றொரு மணிகண்டன், முத்துச்சாமி ஆகிய நால்வரும் நீச்சல் தெரியாத நிலையில் அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 4 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து அந்த பகுதியில் ஆற்றில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது