அரசுப் பள்ளிகளில் அட்மிசன் கொண்டாட்டம்! – மாணவர்களை அதிகரிக்க புதிய ப்ளான்!

ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (10:57 IST)
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மாநில அரசுக்கு சொந்தமான தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகள் பல செயல்பட்டு வருகின்றன. சமீப காலமாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், கொரோனாவிற்கு பிறகான பொருளாதார நெருக்கடி காரணமாக பல மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஆண்டு பொதுத்தேர்வுகள் நடந்து முடியவுள்ள நிலையில் விரைவில் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, நாளை முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் “மாணவர் சேர்க்கை கொண்டாட்டம்” நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார். நாளை தொடங்கி ஏப்ரல் 28 வரை இந்நிகழ்ச்சி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களிடையே கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்