ஃபிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழப்பு: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (11:12 IST)
ஃபிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழப்பு: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
சென்னையில் இன்று அதிகாலை பிரிட்ஜ் வெடிப்பு 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையை சேர்ந்த ஊரப்பாக்கம் என்ற பகுதியில் உள்ள கோதண்டராமன் நகரில் உள்ள ஒரு வீட்டில் மின்கசிவு காரணமாக ஃபிரிட்ஜ் வெடித்துளது.
 
இதனால் அந்த பிரிட்ஜில் இருந்து வெளியான வாயுக் கசிவின் காரணமாக அந்த வீட்டில் இருந்த 3 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஃபிரிட்ஜ் வெடித்ததில் கிரிஜா, அவரது தங்கை ராதா மற்றும் உறவினர் ராஜ்குமார் ஆகியோர் உயிரிழந்ததாகவும் இதுகுறித்து மின்சார துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
முதல் கட்ட விசாரணையில் ஃபிரிட்ஜ் உள்ள கம்ப்ரஸர் வெடித்து அதில் உள்ள விஷவாயு கசிந்ததால் தீயில் கருகி இறந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்