செப்.1 முதல் இலவச பேருந்து: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (18:55 IST)
தமிழகத்தில் ஏற்கனவே பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து என்ற சலுகை அமலில் இருக்கும் நிலையில் தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மாணவ மாணவிகளுக்கும் இலவச பேருந்து என அறிவிக்கப்பட்டுள்ளது
 
நீண்ட இடைவேளைக்கு பிறகு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன
 
இந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அன்றைய தினத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் சீருடையுடன் இருந்தால் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்றும் அவர்களுக்கு பாஸ் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்