மெரினா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட 4 கற்சிலைகள்.. கடலில் வீசப்பட்டதா?

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (07:25 IST)
சென்னை மெரினா கடற்கரையில் நான்கு கற்சிலைகளை ரோந்து காவல்துறையினர் கண்டெடுத்த நிலையில் இது குறித்த தகவல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்க அருகே நான்கு கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் இந்த சிலைகளை மீட்டு காவல் நிலையத்தில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கோவில்களில் இருக்கும் பழைய கற்சிலைகளை அகற்றி புதிய கற்சிலைகளை அமைக்கும்போது ஆகம விதிப்படி பழைய கற்சிலைகள் நீர்நிலையில் வீசுவது வழக்கம். அதுபோல் யாராவது நீர் நிலைகளில் இந்த கற்சிலைகளை வீசி உள்ளார்களா அல்லது சிலைகளை கடத்தும் கும்பல் வீசி உள்ளார்களா என்பது குறித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர் 
 
சென்னை மெரினா கடற்கரையில் நான்கு பழங்கால கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்