இன்னும் சிலமணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (14:39 IST)
இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் நாளை தமிழகத்தில் உள்ள கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி, ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்