61நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு; அதிகாலையில் கடலுக்குள் சென்ற மீனவர்கள்..!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (07:29 IST)
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து இன்று அதிகாலை மீனவர்கள் கடலுக்குள் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்படும் என்பதும் மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த 2 மாதங்களுக்கும் ஆழ்கடலில் சென்று விசைப்படகுகளில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும் என்பதும் தெரிந்ததே. 
 
ஜூன் 14ஆம் தேதி அதாவது நேற்றுடன் இந்த தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து இன்று அதிகாலை சென்னை காசி மேட்டில் இருந்து மீன்பிடிக்க ஆழ் கடலுக்குள் மீனவர்கள் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
61 நாட்களுக்குப் பிறகு இன்று மீன்பிடிக்க செல்வதால் விசை படகுகளுக்கு மீனவர்கள் பூஜை போட்டு வழிபாடு செய்ததாக என்பதும் அதன் பின்னர் அவர்கள் கடலுக்குள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்