சுயநலவாதிகளின் தூண்டுதலால் போராட்டம்: சென்னை மெரினா லூப் குறித்து நீதிமன்றம்..!

செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (14:58 IST)
சென்னை மெரினா லூப் சாலையில் சுயநலவாதிகளின் தூண்டுதலால் போராட்டம் செய்து போக்குவரத்தை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மாநகராட்சி அதிகாரிகள் சமீபத்தில் சென்னை மெரீனா லூப் பகுதியில் இருந்த  கடைகளை அப்புறவுபடுத்தினர். இதை எதிர்த்த மீனவர்கள் சாலையை மறித்து, கடைகளை அகற்ற விடாமல் போராட்டம் நடத்தினர்.
 
இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்,  சுயநலவாதிகளின் தூண்டுதலால் போராட்டம் செய்து போக்குவரத்தை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது. மேலும் இன்றைய வழக்கின் விசாரணையின்போது மீன் சந்தை கட்டுமான பணிகள் முடியும் வரை சாலையின் மேற்கு பக்கம் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கடைகள் அமைக்க அனுமதி வேண்டும் என மாநகராட்சி கோரிக்கை விடுத்தது
 
மாநகராட்சியின் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்திய நிலையில் இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்