செந்தில் பாலாஜியால் பிறநோயாளிகள் பாதிக்கப்படுகிறார்களா? பொதுமக்கள் அதிருப்தி..!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (07:16 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அங்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சரிவர ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்கவில்லை என பொதுமக்கள் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி நெஞ்சு வலியால் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை கவனிப்பதிலேயே மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றும் அங்கு வரும் பிற நோயாளிகள் பேட்டரி வாகனம் முறையாக இயக்கப்படாததால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் ஓமந்தூரார் மருத்துவமனையில் பணி செய்யும் பணியாளர்கள் தங்களை மரியாதை குறைவாக நடத்துவதாகவும் பிற நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்த உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 
செந்தில் பாலாஜிக்கு ஒரு பக்கம் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் மற்ற நோயாளிகளையும் மருத்துவர்கள் சரியான முறையில் கவனிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்