வலையில் சிக்கும் ஜெல்லி மீன்கள்.. பதறும் மீனவர்கள்

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (16:57 IST)
வேதாரண்யம் பகுதியில் மீனவர்கள் வலையில் ஜெல்லி மீன்கள் சிக்குவதால் மின் பிடிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

வேதாரண்யம் கோடியக்கரையில் அதிக அளவில் விஷத்தனமையுள்ள ஜெல்லி மீன்கள் காணப்படுகின்றன. கடற்பரப்பில் அதிக அளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுவதால் மீனவர்கள் மீன் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரை கோடியக்கரையில் மீன்பிடி சீசன் ஆரம்பமாகும், இந்த மீன்பிடி சீசனில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன்பிடிப்பார்கள். சீசன் முடிந்த பிறகு உள்ளூர் மீனவர்கள் மட்டும் சிறிய படகில் மீன் பிடிக்கச் செல்வர்கள். இந்நிலையில் தற்போது ஜெல்லி மீன்கள் வலைகளில் சிக்குவதால் முறுக்கு ஏற்பட்டு மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் கரை திரும்புகின்றனர்.

இது குறித்து அப்பகுதியிலுள்ள முன்னாள் மீனவர் சங்கத்தைச் சேர்ந்த சித்ரவேலு, கோடியக்கரையில் தற்போது 100 க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர். அந்த மீனவர் வலைகளில் ஜெல்லி மீன்கள் மாட்டிகொள்வதால் மீன் பிடிக்க முடியாமல் போகிறது. மேலும் இந்த ஜெல்லி மீன்கள் நமது உடலில் பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதால் மீனவர்கள் பதறிபோய் உள்ளனர் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்