மீனவர்கள் வலையில் சிக்கிய ’மீன் ’ இவ்ளோ டன் வெயிட்டா ?

ஞாயிறு, 30 ஜூன் 2019 (17:21 IST)
இன்றைய உலகின் பெரும்பாலானவர்களின் விருப்பமான உணவு மாமிசம் மற்றும் மீன். இதில் அனைத்து தரப்பினர்களையும் கவரும் முக்கியமான உலகளாவிய உணவாகவும் மீன் இருக்கிறது.
இந்நிலையில் இலங்கையி உள்ள கிளிநொச்சி தீவு அருகே இரணை தீவு கடல் பகுதியில் மீனவர்களின் வலையில்  சுமார் 4 டன் எடையுள்ள ராட்சத மீன் ஒன்று சிக்கியுள்ளது அப்பகுதி மக்களுக்கு பெரும்  ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இலங்கை மீனவர்கள் நாச்சிக்குடா பகுதியில் இருந்து கடலுக்கு மீன்  பிடிக்கச் சென்றனர்.  அவர்கள் விரித்த வலையில் ராட்சத மீன் ஒன்று சிக்கியது. இந்த மீனின் எடை சுமார் 4 டன் எடை  ஆகும். பிடித்த மீனை மீனவர்கள் பலர் உதவியுடன் போராடி கரைக்குக் கொண்டு வந்தனர்.
 
மேலும், இந்த மீனை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரிகள் இது உண்பதற்கு ஏற்றதல்ல என்று கூறிதன் பேரில் மீனவர்கள் அந்த மீனை மீண்டும் கடலிலேயே விட்டனர். 
 
அதிக எடையுடன் கிடைத்த ராட்சத மீன் உண்மைக்கு ஏற்றதல்ல என்று அதிகாரிகள் கூறியதால், மீனவர்களின் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது. இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்