தந்தையின் தவறான தொழிலால் தூக்கிட்டு தற்கொலை செய்த குடும்பம்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (19:58 IST)
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் ஊழியராக பணிபுரிந்து வந்த தமிழ்செல்வன், திருட்டு நகைகளை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்தார். இதனால் அவமானம் தாங்காத மனைவி, மூன்று மகள்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.


 
 
ஆழ்வார் திருநகரில் மனைவி ஜெயா(50), மகள்கள் சக்திமாலா(22), கலைவாணி(20), காயத்ரி(17) ஆகியோருடன் வசித்து வந்தார் தமிழ்செல்வன். இந்நிலையில் இன்று காலை ஜெயாவும், அவரது மூன்று மகள்களும் வீட்டினுள் தூக்கில் பிணமாக தொங்கினர்.
 
இறந்த உடல்களை கைப்பற்றி மருத்துவமனையில் பிரேத பரிச்சோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை நடத்தியதில் தமிழ் செல்வன் திருட்டு நகைகளை வாங்கி அவற்றை விற்கும் தொழிலை செய்து வந்தது தெரியவந்தது.
 
இந்நிலையில் இது தொடர்பாக நேற்று போலிசார் தமிழ் செல்வனை கைது செய்துள்ளனர். இந்த அவமானம் தாங்காமல் அவரது மனைவியும், மகள்களும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
 
மேலும் அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதில், அப்பா நாங்கள் அந்த தவறை மீண்டும் செய்யாதீர்கள் என திரும்ப திரும்ப சொல்லிவருகிறோம். ஆனால் நீங்கள் அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகிறீர்கள். எனவே எங்களுக்கு உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. இறைவனிடம் செல்லுகிறோம் என எழுதப்பட்டிருந்தது.
அடுத்த கட்டுரையில்