விளைநிலங்கள் வழியே உயர்மின் கோபுரம்: விவசாயிகளின் போராட்டம் வாபஸ்

Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (16:18 IST)
விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருந்த நிலையில் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விளைநிலங்கள் வழியாக உயர்மின்கோபுரம் அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டமும், திருப்பூர், ஈரோடு, கோவையில் கடந்த 14 நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த காத்திருப்பு போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது.

மேலும் இந்த போராட்டங்களுக்கு பதிலாக வரும் ஜனவரி 3ம் தேதி முதல் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்