களத்தில் குதித்த சின்ன கேப்டன்: ஆசிரியர்களுக்கு நேரில் ஆதரவு

வெள்ளி, 28 டிசம்பர் 2018 (12:14 IST)
ஊதிய முரண்பாடு குறித்து போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார் கேப்டனின் மகன் விஜயபிரபாகரன்.
7வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் எனவும் சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் 5வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இதனால் டிபிஐ வளாகமே பரபரப்பாக காணப்படுகிறது. 
கொட்டும் பனியில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் தேமுதிகவின் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஆசிரியர்களை நேரில் சந்தித்தார். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாகவும் கூறினார். கேப்டன் இல்லாத இடத்தையும் அவரின் இடத்தில் இருந்து செய்ய வேண்டிய செயல்களையும் அவர் செய்து வருகிறார்.  ஊதிய முரண்பாடு விஷயங்களில் தமிழக அரசு மற்ற மாநிலங்களை பார்த்தாவது திருந்த வேண்டும் என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்