தமிழகத்தில் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு? இன்று மாலை அறிவிப்பு

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (15:22 IST)
இந்தியாவில் கொரொனா தொற்றுக்கு இதுவரை 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 4 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாநிலங்களில் இறப்பு விகிதம் 1 சதவீதத்திற்குள் இருக்கும் படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில்,  தமிழகத்தில் பொது ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில்  மேலும்  நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய காணொலி வாயிலான ஆலோசனை நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து, இன்று மாலை மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு
பிறகு  இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
அநேகமாக சில தளர்வுகளுடன் பொது ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்