பிரமாணப் பத்திரத்தை வாபஸ் பெறும் ஓ.பி.எஸ், எடப்பாடி - சசிகலா பதவி பறிப்பு?

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (13:44 IST)
சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் சமர்பித்த பிரமாணப் பத்திரத்தை வாபஸ் பெற எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் நாலை டெல்லி செல்கின்றனர்.


 

 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில், 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், சசிகலாவிற்கு எதிராக எந்த தீர்மானும் நிறைவேற்றப்படவில்லை. அதாவது, பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவரை நீக்குவது குறித்து, தீர்மானத்தின் எந்த இடத்திலும் வார்த்தையோ, வரியோ இடம்பெறவில்லை. 
 
ஆனால், திடீர் திருப்பமாக அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நியமித்த போது, தேர்தல் ஆணையத்தில் சமர்பித்த பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெறுவது என முடிவுஎடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ஓ.பி.எஸ்  மற்றும் எடப்பாடி அணி இரண்டும் பிரிந்து செயல்பட்ட போது, இரு அணிகளின் சார்பாக தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்ட அனைத்து பிரம்மாணப் பத்திரங்களையும் வாபஸ் பெறுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் நாளை டெல்லி செல்கின்றனர்.


 

 
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு ஆகியவை விரைவில் கூட இருப்பதை காரணம் கூறி பிரம்மாணப் பாத்திரங்களை அவர்கள் வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர்.
 
சசிகலா நியமனம் தொடர்பான பிரம்மாணப் பத்திரத்தை வாபஸ் பெறுவதன் மூலம், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவர் தானாகவே நீக்கம் செய்யப்பட்டுவிடுவார் எனத் தெரிகிறது. 
 
இதுவரை தினகரன் மீது மட்டுமே குறி வைத்து செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிச்சாமி அணியினர், தற்போது சசிலாவின் பொதுச்செயலாளர் பதவி மீதும் குறி வைத்து செயல்படுவது, சசிகலா ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்