ஊழியர் மரணம் - முழு ஒத்துழைப்பு அளிப்பதாக சென்னை ஐஐடி உறுதி!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (12:31 IST)
ஊழியர் மரணம் தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக சென்னை ஐஐடி விளக்கம் அளித்துள்ளது. 

 
சென்னை ஐஐடியில் பணிபுரிந்து வரும் கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவர் திடீரென நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவர் தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதை அடுத்து, அவரது உடல் ஐஐடி வளாகத்தில் உள்ள காந்தி மைதானத்தில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் இந்த மரணம் குறித்த விசாரணைக்கு சென்னை ஐஐடி முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரலில் பணியில் சேர்ந்த ஊழியர் உன்னி கிருஷ்ணன் வளாகத்துக்கு வெளியே வசித்து வந்ததாக சென்னை ஐஐடி தகவல் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்