கேள்வியும் நீங்களே, பதிலும் நீங்களே! ஒரு வித்தியாசமான செமஸ்டர் தேர்வு!

வெள்ளி, 28 மே 2021 (20:33 IST)
மாணவர்களே கேள்வியும் எழுதி பதிலும் எழுதவேண்டும் என கோவா மாநிலத்தில் உள்ள ஐஐடியில் செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கோவாவில் உள்ள ஐஐடியில் புதுமாதிரியான செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதில் மாணவர்கள் தாங்கள் படித்த பாடங்களிலிருந்து கேள்வியை எழுதி அவர்களே பதிலும் எழுதிக்கொள்ளலாம். இரண்டு மணி நேரத்தில் கேள்விகள் எழுதி பதில் எழுதுவதற்கு 60 மதிப்பெண்கள் வழங்கப்படும். மேலும் நீங்கள் எழுதிய கேள்வியும் பதிலும் வேறொரு மாணவருடன் ஒரே மாதிரி ஒத்துப் போயிருந்தால் மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த வித்தியாசமான தேர்வை ஐஐடி மாணவர்கள் எப்படி எழுதுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மாணவர்கள் பாடங்களை எந்த அளவுக்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கணக்கில் கொள்ளவே இம்மாதிரி புதுமையான தேர்வு வைக்கப்பட்டுள்ளதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்