சிரிக்கவைத்தவர்… நம்மை விட்டு நீங்கியிருக்கிறார்- கமல் டுவீட்

புதன், 20 ஜனவரி 2021 (23:21 IST)
பிரபல மலையாள நடிகரும் மூத்த சினிமா கலைஞருமான உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி இன்று தனது 98 வயதில் கலமனார். இவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மலையாள சினிமாவில் பழம்பெரும் நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. இவர்  தேசாதனம், ஓரால் மந்திரம், களியாட்டம் ராப்பகல், கல்யாணராமன் உள்ளிட்ட பல படங்களி தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.

தமிழில் கமல்ஹாசன் நடிப்பில்  உருவான பம்பல் கே சம்பந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது 98 வயதான உன்னிகிருஷ்ணன் சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரொனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் காலமானார்.

இந்நிலையில் இவர்து மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், 73ஆவது வயதில் நடிக்க வந்து 18 வருடங்களாக மலையாளிகளைச் சிரிக்கவைத்தவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. இளமை துள்ளும் தாத்தாவாகக் கலையுலகில் வளையவந்தவர். இன்னும் 2 ஆண்டுகளில் சதமடிக்கவேண்டியவர் இன்று நம்மை நீங்கியிருக்கிறார். நெஞ்சார்ந்த அஞ்சலிகள்  எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்