ஐடி ரெய்டை அடுத்து அமலாக்கத்துறை ரெய்டு.. செந்தில் பாலாஜிக்கு சிக்கல் மேல் சிக்கல்..!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (10:23 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர் என்பதும் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் வருமானவரித்துறை சோதனையை அடுத்து தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லம் உள்பட மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளதாகவும் சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ புரம் அபிராமிபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
 
கரூரிலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், 5 வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும், மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்