கரூர் வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் ஐடி ரெய்டு..!

வெள்ளி, 2 ஜூன் 2023 (12:06 IST)
கரூரில் கடந்த சில நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை செய்து வரும் நிலையில் தற்போது கரூர் வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர்.
 
மேலும் கரூர் வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் இருந்து இரண்டு பெட்டிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சோதனை முடிந்தவுடன் இரண்டு பெரிய பெட்டிகளுடன் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் புறப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்ற இரண்டு பெட்டியில் இருப்பது சொத்து ஆவணங்களா என கேள்வி எழுந்துள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்