யார் யார் பேச வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்வேன்: பதுங்கும் எடப்பாடி!

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (16:21 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை யாராலும் அவ்வளவு சீக்கிரம் தொடர்புகொள்ள முடியவில்லையாம். தான் யாரிடம் பேச வேண்டும் என எடப்பாடி நினைக்கிறாரோ அவர்களிடம் மட்டுமே பேசுகிறாராம்.
 
எடப்பாடியின் உதவியாளராக இருப்பவர் கார்த்திக். எடப்பாடியின் சொந்த ஊரான கார்த்திக்கை எடப்பாடியை தெரிந்த எல்லாருக்கும் தெரியுமாம். எல்லாவற்றுக்கும் மேலாக கார்த்திக்கை தொடர்பு கொண்டால் தான் எடப்பாடியிடம் பேச முடியுமாம். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக எடப்பாடி பழனிச்சாமியை யாரும் தொடர்புகொள்ள முடியவில்லை என சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
 
எடப்பாடிக்கு தெரிந்தவர், வேண்டப்பட்டவர், உறவினர்கள் என யார் போன் செய்தாலும் அண்ணன் இப்போ பிஸியாக இருக்கிறார், அவர் ஃப்ரீயானதும் கால் பண்ணித் தரேன் என அனைவரிடமும் ஒரே பதிலையே கூறி வருகிறாராம் கார்த்திக். ஆனால் திருப்பி யாருக்கும் கால் செய்வதில்லை. இதனால் பலரும் அப்செட்டில் உள்ளனர்.
 
இது என்ன சில தினங்களுக்கு முன்னர் டிடிவி தினகரன் போன் செய்தபோது கூட கார்த்திக் இதே பதிலை சொல்லி அவரை கடுப்பேற்றி விட்டாராம். இதனால் தினகரன் டென்ஷன் ஆகி கார்த்தியை வறுத்தெடுத்தாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் கார்த்திக் தனது நெருக்கமானவர்களிடம், போனை கொடுக்கிறதுல எனக்கு என்ன பிரச்சனை, அண்ணன் யாருகிட்ட பேசணும்னு நினைக்கிறாரோ அவங்ககிட்டதானே பேசுவாரு. இவங்ககிட்ட எல்லாம் பேசுங்கன்னு அவரை கட்டாயப்படுத்தியா போனை கொடுக்க முடியும்.
 
யாரெல்லாம் போன் பண்ணினாங்கன்னு நான் அவருகிட்ட லிஸ்ட் கொடுப்பேன். அவரு யாருக்கு திரும்ப போன் போட்டு தர சொல்றாரோ அவங்களுக்குதானே போன் பண்ணி கொடுக்க முடியும். இது புரியாம எல்லோரும் என்கிட்ட சத்தம் போடுறாங்க என புலம்பி இருக்கிறார் கார்த்திக். எடப்பாடி ஏன் இப்படி யாரிடமும் பேசாமல் பதுங்குகிறார் என்பது அரசியல் வட்டாரத்தில் பலருக்கும் சந்தேகமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்