நாட்-அவுட் பேட்ஸ்மேன் பழனிச்சாமி: தினுசு தினுசா புகழும் அதிமுகவினர்!!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (08:02 IST)
எடப்பாடி பழனிச்சாமி நாட்-அவுட் பேட்ஸ்மேனாக தேர்தல் களத்தில் நின்று மீண்டும் முதல்வர் ஆவார் என அமைச்சர் ஓ.எஸ் மணியன் கருத்து. 
 
தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தமிழகத்தின் இரு பெரு கட்சிகளான அதிமுகவும் திமுகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சர் ஓ.எஸ் மணியன் தனது சமீபத்திய பேட்டியில் எடப்பாடியார் குறித்து பின்வருமாறு பேசினார், 
 
அதிமுகவினர் எங்கு சென்றாலும் பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு அளிக்கின்றனர். இன்னும் எஞ்சி இருக்கும் நாட்களில் ஓப்பனிங் பேஸ்மேனாக களமிறங்கும் எடப்பாடி பழனிச்சாமி அவுட் ஆகாத பேட்ஸ்மேனாக களத்தில் நின்று 234 ரன்களை அடித்த பெருமை பெற்றவராக திகழ்வார். 
 
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழையில் சிறப்பான ஆட்சி வழங்கும் எடப்பாடி பழனிசாமியை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவினரும், கூட்டணி கட்சியினரும் அமோக வெற்றியை பெறுவர் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்